ஆரோக்கியமான வாழ்வும், அதன் முக்கியத்துவமும்

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதன் முக்கியத்துவம்

ஆரோக்கியமில்லா வாழ்வு என்பது வீரர்கள் இல்லாத இராணுவம் போன்றதும், கோகோ இல்லாத சாக்லேட் போன்றதும் ஆகும். வாழ்க்கையை முழுமையாக வாழ ஆரோக்கியம் மிகவும் அவசியம்.

ஒரு நபர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால், உடல் ஆரோக்கியமாகவும், மனம் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதால் ஆயுள் நீட்டிக்கும்; அதுவே உடலையும் மனதையும் கூட புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

மனிதனின் மகிழ்ச்சிக்கு ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது.

ஆரோக்கியம் என்றால் என்ன?

முழு உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியாக நலமுடன் இருக்கும் நிலையே ஆரோக்கியம் எனப்படுகிறது. ஆரோக்கியம் என்பது உடலைப் பராமரிப்பதும், பல்வேறு நோய்கள் ஏற்படும் சாத்தியங்களைக் குறைக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் உள்ளடக்கியதாகும்.

உடலியல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்களுக்கு உடல் வெளிப்படுத்தப்படும் போது, இயற்கையாகவே உடலானது அதன் செயல்பாடுகள் மற்றும் வளர்சிதை மாற்ற திறன்களைப் பயன்படுத்தி தன்னை தயார்படுத்திக் கொள்கிறது – அப்போது தான் தொடர்ந்து இயல்பாக இயங்க முடியும்; இந்த திறனே ஆரோக்கியம் எனப்படுகிறது.

ஒரு நபர் தனது வழக்கமான அன்றாட செயல்பாடுகளை சீரான முறையில் மேற்கொள்ள ஆரோக்கியத்தை நன்கு வைத்திருப்பது உதவும்.

ஒரு நபரின் உடல் ஆரோக்கியம் என்பது உடல் எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை என்பதாகும். அதேசமயம் மனநலம் அல்லது சமூக ஆரோக்கியம் என்பது ஒரு நபரின் பல்வேறு சமூகப் செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறனால் அறியப்படுகிறது.

ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் என்ன?

நல்ல ஆரோக்கியத்தை பேணுவது மிகவும்  முக்கியமாகும், ஏனெனில்…

1. ஆயுளை நீட்டிக்கும்

ஒரு நபர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவில்லை என்றால், அது அந்த நபரின் அன்றாட நடைமுறையை பாதிக்கும். உடலுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கும் போது, ​​அது மேலும் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாறும், அதுவே ஆயுளையும் அதிகரிக்கும்.

2. நோய் தடுப்பு

பல்வேறு நோய்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை உடலுக்கு வழங்குவது, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு மிக அவசியமான ஒரு விஷயமாகும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வெளிப்புற காரணிகளுக்கு எதிராக போராட தயார் நிலையில் இருக்கும் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பே நோயெதிர்ப்பு ஆற்றல் எனப்படுகிறது.

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் மிகவும் முக்கியமாகும்.

3. மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்

ஒருவர் மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே, அவர் திறமையாக செயல்படுவார். உடல் ஆரோக்கியத்தைப் போலவே மனநலமும் முக்கியமான ஒன்றாகும்.

4. உபயோகமான வாழ்க்கையை வாழவேண்டும்

ஒரு ஆரோக்கியமான நபர் தனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்யும் வகையில் வாழ்வார். எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே, ஒருவர் ஆரோக்கியமான நபராகக் கருதப்படுகிறார். அதுவே அவர்களுக்கு சிறப்பாக சேவை புரியவும் உதவுகிறது.

5. நிதி சார்ந்த நன்மைகள்

மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருகிறது. சிறு வயதிலிருந்தே ஒரு நபர் தனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால்  மட்டுமே, ஏதேனும் நோய் ஏற்படும் வாய்ப்பை அவரால் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதன் மூலம், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களைக் குறைக்க முடியும், மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான செலவினையும் குறைக்கலாம்.

நல்ல ஆரோக்கியத்தை அடைவது எப்படி?

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளுக்கு மாறுவதன் மூலம் நமது உடல்நலத்தை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தலாம்.

ஆரோக்கியமான உணவுகளை உண்ணவேண்டும்.

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் உணவுமுறை என்பது ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு ஆரோக்கியத்துடன் நேரடித் தொடர்பினைக் கொண்டுள்ளது.

ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும். குறைவான அசைவ உணவுகளை உட்கொள்வதும், போதிய அளவு தண்ணீர் பருகுவதும் முக்கியமாகும்.

உடற்பயிற்சிகளை வழக்கமாக்குவது, மற்றும் உடலை சுறுசுறுப்பாக இயங்கும்படி வைத்திருப்பதால் எலும்புகளின் அடர்த்தி மற்றும் தசையின் வலிமையை மேம்படும். மிதமான மற்றும் தீவிரமான உடல் பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

இடுப்பைச் சுற்றி சில பவுண்டுகள் எடையைக் குறைப்பதால், டைப் 2 நீரிழிவு மற்றும் பிற இருதய நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

ஆரோக்கியத்தை மேம்படுத்த போதிய தூக்கம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. சரியான நேரத்தில் தூங்குவதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுவதோடு பல்வேறு இதய நோய்களும் தடுக்கப்படுகின்றது.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைப் பயன்படுத்துவதை குறைப்பதால் உடல் நலத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் சத்துக்கள் அல்லாது அதிக கலோரிகள் உள்ளன, இது உடல் எடை மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவையும் அதிகரிக்கும்.

மேற்கூறிய செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியமான நடைமுறைகளுக்கு மாறுவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மொத்தத்தில் தெரிந்துகொள்ள வேண்டியது

ஒரு தனிநபரின் ஆரோக்கியத்தை கவனிக்காமல் விடக்கூடாது. ஆரோக்கியம் என்பது பயனுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதுடன் நேரடித் தொடர்பினைக் கொண்டது.

உடலின் செயல்பாடுகள் என்பது பல்வேறு உறுப்புகளுக்கு இடையே நிகழும் ஒருங்கிணைந்த செயல்களாகும். உடலின் செயல்பாடுகளை சரியாக வைத்திருக்க உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமாகும்.

ஆரோக்கியம் என்பது உடல், மனம் மற்றும் சமூக நல்வாழ்வில் ஒருவரது நிலையைக் குறிக்கிறது, எனவே நல்லதொரு ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

Scroll to Top