பெண்களுக்கு அடிவயிற்று வலி ஏற்பட காரணம் என்ன?

பெண்களுக்கு அடிவயிற்று வலி ஏற்பட காரணம் என்ன?

பெண்களுக்கு ஏற்படக்கூடிய அடிவயிற்று வலியானது ஒரு பொதுவான பிரச்சனையாகும்.அது தொப்புளுக்கு கீழே ஏற்படக்கூடியது.சில நேரங்களில் அது இடுப்பு பகுதிக்கும் பரவக்கூடும்.வலிக்கான காரணங்கள் பல உண்டு.மாதவிடாய் முதல் குடல் கோளாறுகள் வரை எண்ணற்றவையாகும்.அனைத்து வயது பெண்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு.முக்கியமாக பூப்படைந்த பெண்கள் அதிகம் பாதிப்படைவார்கள்.

         இந்த வலி பொதுவாக பிரச்சனையாக இருந்தாலும் சில நேரங்களில் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

          எனவே கடுமையான வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவதே சிறந்தது. மனித உடலில் அடி வயிறு என்பது பல்வேறு உள் உறுப்புகளை கொண்ட பகுதியாகும். எனவே வயிற்று வலிக்கு பல்வேறு உடல் உறுப்புகளில் ஏற்படக்கூடிய பிரச்சனையாக இருக்கக் கூடும். அதனால் அதை நன்கு ஆராய்ந்து அறிவது சிறந்ததாகும்.

அடிவயிற்றில் ஏற்படும் வலி

           சில நேரங்களில் இந்த வலியானது முதுகு வரை பரவக்கூடும்.அத்துடன் குமட்டல்,தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாகலாம். ஏற்படலாம்.குறிப்பாக பெண்களுக்கு அடிவயிற்றில் குடல் மற்றும் கருப்பை போன்ற முக்கிய உறுப்புகள் இருப்பதால் வலி  ஏற்பட்டால் அதற்கான காரணத்தை அறிவது அவசியம். 

சிறுநீர் பாதை தொற்று (UTI)

     நமது சிறுநீரக பாதையானது நுண்ணுயிரிகளால்  ஏற்படும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நேரங்களில், பாக்டீரியாக்கள் சிறுநீரகத்திற்குள் நுழைந்து நோய் தொற்றினை ஏற்படுத்தலாம்.

Urinary Tract Infection

     இக்கிருமிகள்  தொற்று நோயினை ஏற்படுத்தி அடிவயிற்றில் வலியை உண்டாக்கும். தொற்று குறைவாக இருக்கும் போது தண்ணீர் எடுத்துக் கொண்டால் அவை தானாகவே சரியாக விடும்.

       சில நேரங்களில் இது கடுமையாக மாறலாம். மேலும் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய நிலையை உருவாக்கலாம்.

    கடுமையான சிறுநீரகத் தொற்று அடிவயிற்றின் இருபுறமும் நாள்பட்ட வலிக்கு வழிவகுக்கிறது.

UTI ஐ கீழ்கண்ட வகைகளில் கட்டுப்படுத்தலாம் மற்றும் தடுக்கலாம்:

1. தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்ளுவது.

2.குருதிநெல்லி சாறு குடிப்பது (முடிவான ஆய்வு இல்லை என்றாலும், பல பெண்கள் இதைப் பரிந்துரைத்தனர்)

3.டியோடரண்டுகள், பவுடர்கள் போன்ற தோல் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

இடுப்பு அழற்சி நோய்

      பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் தொற்று காரணமாக இடுப்பு அழற்சி நோய் ஏற்படுகிறது. பிறப்புறுப்பில் இருந்து கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்களுக்கு பாலியல் ரீதியாக பரவும் பாக்டீரியாக்களே இதற்கு காரணம்.

     லேசான தொற்று எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதுவே அதிகமானால், அடிவயிற்றின் கீழ் பகுதியில் கடுமையான வலி இருக்கலாம். தீவிரமடைவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

கீழ் இடது வயிற்றில் வலி

      சிலருக்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் தொடர்ந்து வலி ஏற்படும். அடிவயிற்றின் இடது புறத்தில் பெருங்குடல் மற்றும் கருப்பை உள்ளது.பெரும்பாலும், செரிமான பிரச்சனைகள்  அடிவயிற்றின் கீழ் இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்துகின்றன. இருப்பினும்,அடிவயிற்று வலிக்கு மேலும் சில விசித்திரமான காரணங்கள் இருக்கலாம்.

வாயு (வாய்வு)

        தற்செயலாக அதிகப்படியான காற்றை விழுங்கும் போது, அது அடிவயிற்றின் கீழ் இடது பக்கத்தை வந்தடையும். மேலும், செரிமான செயல்பாட்டின் போது, குடல்   பாக்டீரியாவானது உணவை உடைக்கும்போது ஒரு துணை உற்பத்தியாக வாயு   வெளியிடப்படுகிறது. வாயுவை உருவாக்கும் உணவுகளை உட்கொள்ளும் போது வாயுவும் சேரும்.

         சிறிய அளவு வாயு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது. இருப்பினும், வரம்பினை மீறும் போது,வயிற்றின் இடது பக்கத்தில் சில விரும்பத்தகாத வலியை  உணரலாம்.

டைவர்டிகுலர் நோய்

          பெருங்குடல் சுவரில் ஏற்படும் சிறிய வீக்கம் டைவர்டிகுலர் நோய் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கட்டிகள், வளரும் போது, வயிற்றில் வலியை ஏற்படுத்தும். இது வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.

        நீண்ட காலமாக அடிவயிற்று வலி மற்றும்  மலத்தில் இரத்தம் அல்லது மலத்தின் நிறத்தில் வித்தியாசத்தினை கண்டால், நீங்கள் மருத்துவரிடம் அணுக வேண்டியது அவசியம்.

அடிவயிற்று வலியினை ஏற்படுத்தும் வேறு சில காரணங்கள்:

தசை வலி

         சில சமயங்களில் வயிற்று வலி வயிற்று தசைகள் அழுத்தப்படுவதால் ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்வதால் வயிற்று தசைகள் இருக்கமடைந்து  இதுபோன்ற வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கர்ப்ப வலி

        கர்ப்ப காலம் என்பது எல்லா பெண்களுக்கும் மறக்க முடியாத ஒரு அழகான நிகழ்வு. அந்நேரத்தில் பெண்களின் உடல் அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் போது அடிவயிற்றில் அவ்வப்போது வலி ஏற்படும்.

Pregnancy pain

     ஒரு பெண்ணின் வயிற்று தசைகள் பிரசவத்திற்காக கர்ப்பத்தின் பிற்பகுதியில் தங்களை சரிப்படுத்திக் கொள்கின்றன. இது தசைகளை அழுத்தவும் மற்றும் சுருங்கவும் செய்கிறது.அதனால் வலி ஏற்படுகிறது

        பெரும்பாலான நேரங்களில் இது தீவிரமானதாக இருக்காது.ஆனால் கடுமையான வலி அல்லது பிறப்புறுப்பில் திரவ வெளியேறுவது/இரத்தப்போக்கு போன்றவற்றை உணர்ந்தால், விரைவில் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

இடம் மாறிய கர்ப்பம்

    பெண்ணின் கருவுற்ற முட்டை கருப்பைக்கு வெளியே உள்ள உறுப்புகளில் நிலைபடுவது எக்டோபிக் கர்ப்பம் எனப்படும். பெரும்பாலும், முட்டை ஃபலோபியன் குழாய்களில் நிலைப்படும்.

அத்தகைய சூழ்நிலையில் முட்டை ஒரு குழந்தையாக உருவாகாது.

ஆனால் அது உருவாகினால், அது கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும். இது பெண்ணின் அடிவயிற்றுப் பகுதியில் லேசான முதல் நாள்பட்ட வலியை ஏற்படுத்துகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில், விரைவில் ஒரு மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சையைப் பெறுவது மிகவும் நல்லது.

முடிவுரை 

       பொதுவாக, பெண்களுக்கு வயிற்று வலி என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால்  எதனால் அடி வயிற்றில் வலி ஏற்படுகின்றது என்பது கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.

     பெரும்பாலான காரணங்களை எளிய வீட்டு வைத்தியம் மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை மூலம் சமாளிக்க முடியும். வலி கடுமையாகும் போது மருத்துவ உதவி தேவைப்படும். எனவே வலியின் தன்மையை தெரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும். நீடித்த வயிற்று வலியாக இருப்பின், உடனே மருத்துவரை தொடர்பு கொண்டு அதற்கான காரணங்களை கண்டறிந்து சிகிச்சை முறைகளை மேற்கொள்வதே சிறந்தது.

Scroll to Top