மஞ்சள்சேர்த்த பாலின் 13 அற்புதமான பலன்கள்

மஞ்சள்சேர்த்த பாலின் 13 அற்புதமான பலன்கள்

மஞ்சள் சேர்த்த பால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹல்தி தூத் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹல்தி தூத் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வளிக்கும் ஒரு பானமாகும்; சூடான ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மட்டும் சேர்த்தால் போதும், உங்கள் உடலுக்கு தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும்.

அறிவார்ந்த அற்புத மூலிகையான மஞ்சள், பல நூற்றாண்டுகளாக நம்முடன் இருந்துவருகிறது, அன்றிலிருந்து இன்று வரை அதிகளவு பயன்பாட்டினையும் கொண்டுள்ளது. இந்தியா, உலகிலேயே மஞ்சளை அதிகம் பயன்படுத்தும் நாடாகும். மஞ்சள் நிறத்தை மட்டும் தருவதில்லை, உங்கள் உணவிற்கு சுவையையும் சேர்க்கிறது. பல மதங்களின் மரபுகளிலும் மஞ்சள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவங்களில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நவீன மருந்துகளும் கூட, நோய் தடுப்பு மற்றும் தீவிர மருத்துவப் பிரிவும் மஞ்சளின் பயன்பாட்டை கௌரவித்து ஏற்றுள்ளது.

மஞ்சள் என்பது நமது வாழ்வில் இன்றியமையாதது! ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள்! 4000 ஆண்டு கால பழமையான மருத்துவ குணங்கள் கொண்ட பொக்கிஷம் இப்போது உங்கள் வீட்டின் சமையலறையில் இருக்கிறது!

பாலில் மஞ்சள் தூளை கலப்பதன் மூலம் இந்த ஆரோக்கியமான தங்க நிற பானம் தயாரிக்கப்படுகிறது. 

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து, உறங்குவதற்கு முன்பு குடித்து வந்தால், உங்கள் ஆரோக்கியம் மேம்படும். தேன், கருப்பு மிளகு, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றையும் இதனுடன் சேர்க்கலாம். சிறந்த பலன்களைப் பெற உறங்க செல்வதற்கு முன்பு இதனை பருகவும்.

மஞ்சள் சேர்த்த பால் (ஹல்தி தூத்) எப்படி வேலை செய்கிறது?

மஞ்சளில் ‘குர்குமின்’ என்கிற ஆற்றல் மிக்க மூலப்பொருள் ஒன்று உள்ளது, அதில் நிறைந்துள்ள பாலிஃபெனால்கள் – ஒரு நல்ல ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டாகவும், ஆன்ட்டிஇன்ஃபிலமேட்டரி தன்மை, ஆன்ட்டி ம்யூட்டஜெனிக் தன்மை, நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஆன்ட்டி மைக்ரோபியல் தன்மைகளும் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளும் நிறைந்துள்ளது.

குர்குமின் நமது செல்கள், இரத்தம் மற்றும் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நம் உடலின் நோய்தொற்று மற்றும் உடலில் ஏற்படும் காயங்களுக்கு எதிராக போராடவும் மற்றும் அதனை குணப்படுத்தவும் மஞ்சள் உதவுகிறது.

மஞ்சள், ஆன்ட்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஆன்ட்டிஇன்ஃபிலமேட்டரி செயல்பாட்டிற்கு உதவும் மூலப்பொருட்களால் நிரம்பியுள்ளது. மஞ்சள் சேர்த்த பாலானது சுவாச பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனைகள், இன்ஃபிலமேட்டரி மற்றும் செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது.

பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு, பாலில் கலந்த மஞ்சள் ஒரு உகந்த சிகிச்சையாகும். அதில் சுவாச நோய்கள், கல்லீரல் பிரச்சனைகள், இன்ஃபிலமேட்டரி மற்றும் மூட்டு வலிகள், செரிமான பிரச்சனைகள், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் ஆகிய பாதிப்புகளும் இதில் உள்ளடங்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளும் மஞ்சளில் உள்ளது.

மஞ்சள் சேர்த்த பாலும் அதன் நன்மைகளும்

சருமத்தினை பேணும் மஞ்சள் கலந்த பால்

இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்கள் மத்தியில் முகப்பரு மற்றும் சருமப் பிரச்சினைகள் என்பவை பொதுவான ஒன்றாகும். முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் விரும்பத்தகாத ஒன்றாகவும், ஒருவரது தன்னம்பிக்கையை பெரிதும் பாதிக்கும் ஒன்றாகவும் உள்ளது.

வயது முதிர்வால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தாமதப்படுத்துகிறது, மற்றும் வெயிலின் காரணமாக ஏற்படும் புள்ளிகள் மற்றும் சரும பாதிப்புகளை சரி செய்கிறது.

இயற்கையான இரத்த சுத்திகரிப்பான்

சிறந்த ஆன்டிசெப்டிக்கான மஞ்சள், இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உறங்கச்செல்லும் முன் மஞ்சள் சேர்த்த பாலை அருந்துவது உடலிலிருந்து நச்சுகளை அகற்றவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும், இரத்தம் மற்றும் உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

நோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது

மஞ்சள் கலந்த பால், குறிப்பாக பெண்களின் ஹார்மோன் சுழற்சிகளை சீராக்க உதவுகிறது. ஹார்மோன் சமநிலை பாதிப்புகள் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (PCOS) அல்லது பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் (PCOD) போன்ற பல உள்ளார்ந்த உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

வாழ்வில் மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு தைராய்டு பிரச்சினைகள் (காய்ட்டர், ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டிசம்) மற்றும் சிறுநீர் பாதை மற்றும் புரோஸ்டேட் நோய்த்தொற்றுகளைத் தடுக்ககவும், எதிர்த்துப் போராடவும் செய்கிறது.

மஞ்சள் கலந்த பால் செரிமானம், சுவாசம் மற்றும் மூட்டுவலி பிரச்சனைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் (எதிர்களித்தில்) போன்ற அறிகுறிகளைப் போக்க மஞ்சள் சேர்த்த ஒரு கோப்பை பால் உதவியாக இருக்கும்.

அடிக்கடி சளி பிடித்தல், மற்றும் மூட்டு மற்றும் தசை பிடிப்பிற்கு, மஞ்சள் அதற்கு இயற்கையான மருந்தாகும்; ஏனெனில் இன்ஃபிலமேஷனுக்கு எதிரான அதன் பண்புகள், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேண உதவுகிறது. வெல்லம் சேர்த்து மஞ்சள் கலந்த பாலை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் எலும்புகளை வலுப்படுத்த முடியும், மற்றும் முழங்கால், இடுப்பு மற்றும் முதுகு போன்ற மூட்டுகளில் ஏற்படும் எலும்பு தேய்மான வலியையும் அது குறைக்கும்.

நாம் நமது வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது, ​​ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கும் நோய்க்கிருமிகள் மற்றும் தொற்றுகள் நிறைந்த காற்றினை சுவாசிக்க நேரிடுகிறது. மஞ்சளைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கும் போது, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது; மஞ்சளால் நமது உடல் அதிக நிலைத்தன்மை கொண்டதாகவும், நோய்த்தொற்றுக்கு எதிராக நன்கு செயல்படுவதாகவும் இருக்கும்.

புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது

மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதை தடுக்கிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் சேர்த்த பாலை உட்கொள்வது கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகளின் பக்க விளைவுகளை குறைக்க உதவும்.

எடை குறைப்பிற்கு உதவும்  மஞ்சள் கலந்த பாலின் நன்மைகள்

உடல் பருமனாக இருப்பதென்பது ஒரு உடல்நலப் பிரச்சினையாகும், மேலும் பல நாடுகள் இதை ஒரு பெரிய வாழ்வியல் குறைபாடாக கருதுகின்றன. அதிக எடை என்பது நம்மில் பலருக்கு வேதனை தரும் ஒரு விஷயமாகும்; எடையைக் குறைப்பது என்பதும் ஒரு சவாலான மற்றும் நீண்ட கால முயற்சியாக கருதப்படுகிறது.

மஞ்சள் கலந்த பாலில் அத்தியாவசிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற காரணிகள் உள்ளதால், அவை உடலில் சேர்ந்த கொழுப்பை உடைத்து எடையைக் குறைக்க உதவுகின்றன. ஒரு கப் வெதுவெதுப்பான மஞ்சள் பாலில் துருவிய அலிவ் விதைகள் (சாலியா விதைகள்) மற்றும் தேன் அல்லது வெல்லம் சேர்த்து உறங்கச்செல்லும் முன் குடித்தால் விரும்பத்தக்க மாற்றத்தைப் பார்க்கலாம்.

மஞ்சள் கலந்த பாலில் உள்ள குர்குமினில் உள்ள இன்ஃபிலமேஷனுக்கு எதிரான பண்புகள் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது. 

குர்குமின் கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது என்று விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலில் உள்ள குர்குமின் மனிதர்களுக்கும் அதே விளைவுகளை ஏற்படுத்துமா என்பது குறித்து இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

தரமான தூக்கத்தை ஊக்குவிக்கிறது

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகள் மற்றும் நவீன உலகின் இன்றைய ஆரோக்கியமற்ற உறக்க சுழற்சிகளால் நம்மில் பலர் இரவு நேர தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறோம். உண்மையில், நாம் கண்களை மூடுவதால் மட்டும் நம் மூளைக்கு ஓய்வு கிடைத்துவிடாது.

தூக்கமின்மை நமது நேரத்தை உபயோகமற்றதாக மாற்றி, நமக்கு பாண்டா கண்கள் எனப்படும் கருவளையத்தினை உண்டாக்குகிறது! சோம்பேறித்தனம் மற்றும் சோர்வை தொடர்ந்து, கண்களில் நீர் வடியும் நிலைக்கும் தூக்கமின்மை வழிவகுக்கிறது. குறிப்பாக மனச்சோர்வு மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது.

உறங்கச்செல்லும் முன் மஞ்சள் கலந்த ஒரு டம்ளர் பாலில் தேன் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். இதன் சுவையை ரசித்து அருந்தலாம். மேலும், அமினோ அமிலங்கள் நமது உரக்க சுழற்சியை சீராக்க உதவுகின்றன. உடல் தன்னைத்தானே சீர்படுத்திக் கொள்ள இரவில் நல்ல தூக்கம் நமக்கு அவசியமாகிறது.

இன்ஃபிலமேஷனுக்கு எதிராக போராடுகிறது

மஞ்சள் கலந்த பாலில் உள்ள குர்குமின் – இன்ஃபிலமேஷன் மற்றும் மூட்டு வலிக்கு எதிராக போராட உதவுகிறது. இன்ஃபிலமேஷனை எதிர்க்கும் அதன் பண்புகள் சில முக்கிய மருந்துகளைப் போலவே செயல்படுகிறது.

பொதுவான வலிக்கு பயன்படத்தப்படும் NSAID-களுக்கு (ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்) மாற்று தீர்வாக வீட்டிலேயே கிடைக்கும் குர்குமினை ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்

புற்றுநோய்க்கு எதிரான மறைமுகமான காரணிகள் குர்குமினில் உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எலும்பு, கருப்பைகள், நுரையீரல், தோல், மூளை மற்றும் செரிமான உறுப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தும் காரணிகளை குணப்படுத்தும் அல்லது குறைக்கும் தன்மை மஞ்சளில் உள்ள இந்த குர்குமினுக்கு உள்ளது என்பதை ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

புற்றுநோயைக் குறைக்கக்கூடிய தன்மையும் மற்றும் கீமோதெரபியின் செயல்பாட்டை அதிகரித்து பயனுள்ளதாக்கும் தன்மையும் குர்குமினுக்கு உள்ளதாக ஆய்வக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது கதிர்வீச்சு மருந்துகளால் ஏற்படும் சேதத்திலிருந்து ஆரோக்கியமான செல்களை பாதுகாப்பதாகவும் அறியப்படுகிறது.

மஞ்சள் கலந்த பாலில் பயன்படுத்தப்படும் மற்றொரு பொதுவான உட்பொருளான இலவங்கப்பட்டையில், சின்னமால்டிஹைடு என்கிற வேதிப்பொருள் உள்ளது, இது புற்றுநோய் அச்சுறுத்தலை குறைக்கும் ஒரு முக்கியமான எமல்ஷனாகும்.

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்

மஞ்சள் கலந்த பாலில் உள்ள குர்குமின் – மனச்சோர்வு மற்றும் அல்சைமர் நோய் ஏற்படக்கூடிய ஆபத்தினைக் குறைக்கிறது.

மஞ்சள் சேர்த்த பாலில் உள்ள இலவங்கப்பட்டையானது மூளையில் உள்ள நரம்பியல் மண்டலத்தை பாதுகாக்கும் புரதங்களுக்கான இடத்தை அதிகரிக்கிறது. பார்கின்சன் பாதிப்புகளை ஏற்படுத்தும் அச்சுறுத்தலைக் குறைக்க மூளையில் இந்த கட்டமைப்புகள் உள்ளன.

மஞ்சளில் உள்ள குர்குமின் வயது முதிர்வின் காரணமாக உண்டாகும் அறிவாற்றல் திறன் குறைவின் ஆபத்தினையும் குறைக்கிறது. ஒருவரது மனநிலையையும் குர்குமின் மேம்படுத்துகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்

மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை ஆகிய இரண்டும், இதய பாதிப்புகளின் அச்சுறுத்தல்களை குறைப்பதாக அறியப்படுகின்றன.

சைட்டோகைன்ஸ் வெளியிடப்படுவதை இந்த குர்குமின் தடுக்கிறது, அவை இன்ஃபிலமேஷனுடன் தொடர்புடைய ஒருவித கலவையாகும். இந்த சைட்டோகைன்ஸ் பெரும்பாலும் கார்டியோவாஸ்குலர் (இதயக் குழாய்) பாதிப்புகளுடன் தொடர்புடையவை.

மஞ்சள் சேர்த்த பாலை உட்கொள்வதால் இதய பாதிப்புகள் குறித்த அச்சுறுத்தல் குறைகிறது என்று ஆய்வில் பங்கேற்ற நபர்களின் மூலம் தெரியவந்துள்ளது. தீங்கான கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

இலவங்கப்பட்டையை உட்கொள்வதால், இது போன்ற நன்மைகளை உண்டாக்கும். எண்டோதீலியல் செல்களின் செயல்பாட்டையும் குர்குமின் மேம்படுத்துகிறது.

மஞ்சள் செரிமானத்தை மேம்படுத்துகிறது

மஞ்சள், பித்த (பைல்) உற்பத்தியை அதிகரித்து, கொழுப்புகளை ஜீரணிப்பதை ஊக்குவிக்கிறது.

மஞ்சள் உட்கொள்வதால் மோசமான குடல் இயக்க குறைபாடுகள் மேம்படுவதாக மற்றொரு முதன்மையான ஆய்வில் தெரியவந்துள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் – இரைப்பைக் குழாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இன்ஃபிலமேஷனுக்கு எதிரான பண்புகளையும், நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஆண்டிமைக்ரோபியல் பண்புகளையும் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

கல்லீரலின் ஆரோக்கியத்தையும் குர்குமின் மேம்படுத்துகிறது. இது கடுமையான அல்லது நாள்பட்ட கல்லீரல் பாதிப்பின் போது கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது. கல்லீரல் சிர்ஹாசிஸ் பாதிப்புடன் தொடர்புடைய என்ஸைம்களுடன் குர்குமின் வினை புரிந்து, கல்லீரல் பாதிப்பின்  ஆபத்தைக் குறைக்கிறது. இருப்பினும், கல்லீரல் ஆரோக்கியத்தில் குர்குமின் அளிக்கும் நன்மைகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்

மஞ்சள் சேர்க்கப்பட்ட பாலில் உள்ள குர்குமின், நோயெதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஒரு இம்யூனோமோடூலேட்டரி காரணியாகும். இது T, B செல்கள், மேக்ரோபேஜ்கள் மற்றும் இயற்கையான கில்லர் செல்கள் ஆகியவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இந்த செல்கள் அனைத்தும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் இன்றியமையாத காரணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகளின் செயல்பாட்டை குர்குமின் மேம்படுத்துகிறது. அதாவது கீல்வாதம், புற்றுநோய், இதய பாதிப்புகள், நீரிழிவு மற்றும் அல்சைமர் போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் மரணத்தை தள்ளிவைக்கும் திறன் குர்குமினுக்கு உண்டு என்றும் கூறலாம்.

மஞ்சள் சேர்த்த பாலானது ஜலதோஷம் மற்றும் தொண்டை வலிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

எலும்புகளை வலுப்படுத்தக்கூடும்

மஞ்சள் கலந்த பாலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது, வலுவான எலும்புகளுக்கு இவை அவசியமாகும். எலும்புகளை வலுப்படுத்துவதோடு, எலும்புச் சிதைவை தடுப்பதிலும் அவை உதவுகின்றன.

தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்க உதவும்

மஞ்சள் சேர்த்த பால் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், பாலில் கலக்கப்பட்ட மஞ்சளானது தூக்கத்திற்கு உதவுவதாக தெரிவந்துள்ளது.

உங்கள் கவலையான சூழ்நிலைகளையும் குறைக்க உதவும் குர்குமின், தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது.

மஞ்சள் சேர்த்த பால் என்பதால் அதில் மஞ்சளை மட்டுமே கலக்க வேண்டும் என்று கிடையாது. ஊட்டச்சத்தினை அதிகரிப்பதற்காக மற்ற முக்கியமான மூலிகைப் பொருட்களின் கலவை நிறைந்த ஒன்றே மஞ்சள் பால் ஆகும்.

மஞ்சள் கலந்த பாலால் கிடைக்கும் மறைமுகமான நன்மைகளையே இங்கு குறிப்பிட்டுள்ளோம். அவற்றின் நன்மையை உணர்வதற்கு, நீங்கள் அந்த பாலை தொடர்ந்து அருந்த வேண்டும். ஆனால் அதை எப்படி செய்வது? இந்த பானத்தை தயாரிப்பது எப்படி?

மஞ்சள் சேர்த்த பாலை எப்படித் தயாரிப்பது?

வீட்டில் மஞ்சள் கலந்த பாலை தயாரிப்பது மிகவும் எளிது.

உங்களுக்கு தேவையானவை

  • ஒரு தேக்கரண்டி மஞ்சள்
  • ½ கப் (120 மிலி) கொழுப்பு நீக்கப்பட்ட பால்
  • ½ தேக்கரண்டி இலவங்கப்பட்டை
  • ஒரு சிட்டிகை கருப்பு மிளகுத் தூள்
  • ஒரு தேக்கரண்டி தேன் (சுவையை கூட்ட)

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்தையும் கலந்து, பின்பு ஆற வைக்கவும்.
  • வெப்பத்தை குறைத்து, பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • ஒரு வடிகட்டியைக் கொண்டு பானத்தை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக்கொள்ளவும்.
  • பானத்தின் மேல் சிறிதளவு இலவங்கப்பட்டை தூளை சேர்க்கவும்.

கருப்பு மிளகுத் தூள் ஒரு சிறப்பு பலனைத் தருகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின், நமது உடலால் சரியாக உறிஞ்சப்படாது. மஞ்சள் சேர்த்த பால் என்பது ஆரோக்கியமான பானமாகத் தோன்றினாலும், எச்சரிக்கையுடன் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

தொகுப்புரை

மஞ்சள் சேர்த்த பால், ஹல்தி தூத் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்தியர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே மஞ்சளின் பல்வேறு நன்மைகளுக்கு மதிப்பளித்துள்ளனர். மக்கள் பாரம்பரியமாகவே வெட்டுகள், மற்றும் காயங்களிலிருந்து ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்தவும், கடும் உடல்நல பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் மஞ்சளைப் பயன்படுத்தியுள்ளனர்.

மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இன்ஃபிலமேஷனுக்கு எதிரான பண்புகள் நிறைந்துள்ளன. மஞ்சள் கலந்த பாலானது சுவாச பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனைகள், இன்ஃபிலமேஷன் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்க உதவும்.

Scroll to Top